- பாப்பரசர்
- பிரஸ்ஸல்ஸ்
- திருத்தந்தை பிரான்சிஸ்
- பெல்ஜியம்
- கிங் பிலிப்
- அலெக்சாண்டர் கிரே
- அலெக்சாண்டர் குரு
பிரசெல்ஸ் : போப் பிரான்சிஸ் நேற்று பெல்ஜியம் வந்தார். அவருக்கு பெல்ஜியம் அரசர் பிலிப் மற்றும் பிரதமர் அலெக்சாண்டர் க்ரூ ஆகியோர் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில்,மன்னர் குடும்பத்தினர்,திருச்சபை பிரமுகர்கள், தூதர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் அலெக்சாண்டர் க்ரூ பேசும்போது,‘‘ கத்தோலிக்க திருச்சபையில் மத குருக்களின் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கிறது. குருக்களின் பாலியல் துஷ்பிரயோகங்களை கத்தோலிக்க திருச்சபை மூடி மறைக்கும் மரபுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெல்ஜியத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இதே போன்ற பாலியல் துஷ்பிரயோகங்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த செயல்களால் ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் கத்தோலிக்க திருச்சபையின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து விட்டது. வெறும் வார்த்தைகள் மட்டும் இதற்கு போதாது. உறுதியான நடவடிக்கைகள் எடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குறைகள் கேட்கப்பட வேண்டும்’’ என்று பேசினார். போப் முன்னிலையில் பிரதமர் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. போப்பாண்டவர் இதை போல கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டது இல்லை. முதல்முறையாக வெளிநாட்டு பயணத்தின் போது போப் முன்னிலையில் ஒரு நாட்டின் பிரதமர் விமர்சித்துள்ளார்.
The post திருச்சபைகளில் பாலியல் சம்பவங்கள் மூடிமறைப்பு: போப் முன்னிலையில் பெல்ஜியம் பிரதமர் விமர்சனம் appeared first on Dinakaran.