×
Saravana Stores

புதுகை ஆர்டிஓ அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம்

 

புதுக்கோட்டை. செப். 28: கறம்பக்குடி ஒன்றியம் கரு.வடதெரு ஊராட்சி வடக்கு கண்ணியான் கொல்லையில் நத்தம் புறம்போக்கு இடத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல்குடியிருக்கும் சலவை தொழிலாளி, தச்சுத் தொழிலாளிகளின் குடியிருப்பு இடத்தையும், புனித சந்தியாகப்பர் தேவாலயத்துக்கு செல்லும் சாலையையும் தனி நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளனர்.

இதனைக் கண்டித்து கடந்த ஜூலை 23ம் தேதி நடத்தப்பட்ட போராட்டத்தில் பட்டா ரத்து செய்யப்படும் என ஆ்ர்டிஓ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கறம்பக்குடி ஒன்றியச் செயலர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகள் நேரில் இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

The post புதுகை ஆர்டிஓ அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist ,Puducherry RTO ,Pudukottai ,Karambakudi Union ,Panchayat North ,Nadham ,Purampokku ,holy Santhyakapar Church ,
× RELATED திமுக கூட்டணி வலுவாக இருந்தால் தான்...