- கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு
- சென்னை
- மகாராஷ்டிரா
- ஆந்திரா
- தெலுங்கானா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடக
- ஆந்திரப் பிரதேசம்
- மகாராஷ்டிரா…
சென்னை: தமிழ்நாட்டிற்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. கர்நாடகா, ஆந்திராவில் தற்போதுதான் அறுவடை துவங்கியுள்ளது. இதனால், மிக குறைந்த அளவே வெங்காயம் வருகிறது. மகாராஷ்டிராவில் இருந்து வெளி நாடுகளுக்கு அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதியாகிறது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை, கடந்த மாதம் ரூ.35க்கு விற்ற 1 கிலோ பெரிய வெங்காயம், தற்போது ரூ.70க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.80க்கு விற்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதை தடுக்கும் விதமாக நுகர்வோர் விவகார துறையின் கீழ் உள்ள இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்ஓசி), ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. பொதுமக்கள் எளிதில் வெங் காயம் வாங்கும் வகையில் சென்னையில் பரபரப்பான சந்தைகள், குடியிருப்புகள், வீட்டு வசதி சங்கங்கள், முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் ெமாபைல் வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது தினசரி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், மலிவு விலையில் வெங்காயம் கிடைக்கவும் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
The post விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை: கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.