- CBCID
- பாஜக
- கேசவ விநாயகா
- தாம்பரம் ரயில் நிலையம்
- சென்னை
- நாயனார் நாகேந்திரன்
- கேசவ விநாயகம்
- எஸ்ஆர் சேகர்
- முரளி
- தின மலர்
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜவின் முக்கிய நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், கேசவவிநாயகம், எஸ்.ஆர்.சேகர், முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரு.4 கோடி பணம் என்னுடையது என ரயில்வே கேன்டீன் உரிமையாளரான முஸ்தபா, வருமானவரித்துறை அலுவலகத்தில் கூறியிருந்தார். இதையடுத்து முஸ்தபாவிடம் விசாரணைநடத்தியதில் அவருக்கும் இந்த பணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிந்தது.
வழக்கை விசாரிக்க கூடாது என பாஜவின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றத்தின் அனுமதி இன்றி கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி விசாரணை நடத்தக் கூடாது என்று நீதிமன்றமும் கூறியது. இதை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து கேசவ விநாயகத்திடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால் வரும் அக்டோபர் 7ம் தேதி காலை 11 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி 2வது முறையாக கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்: 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.