- இந்தியா
- ஐநா பாதுகாப்பு கவுன்சில்
- இங்கிலாந்து
- லண்டன்
- பிரதமர் ஸ்டார்மர்
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்
- ஸ்டார்மர்
- ஐ.நா. பொதுச் சபை
- நியூயார்க், அமெரிக்கா
லண்டன்: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தினார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கலந்து கொண்டு பேசும் போது,’ இந்தியா, ஆப்பிரிக்கா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி நாடுகளுக்கு நிரந்தரப் பிரதிநிதித்துவத்தைத் தவிர, பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறும் வாய்ப்பை வழங்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலுக்கும் இது பொருந்தும்.
அரசியலால் முடங்கிவிடாமல், செயல்படத் தயாராக, அதிக பிரதிநிதித்துவ அமைப்பாக அது மாற வேண்டும். எனவே பாதுகாப்பு கவுன்சிலில் பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நிரந்தர உறுப்பினர்களாக வேண்டும். அதேபோல் நிரந்தர ஆப்பிரிக்க பிரதிநிதித்துவத்தை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்’ என்றார்.
The post ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும்: இங்கிலாந்து வலியுறுத்தல் appeared first on Dinakaran.