×

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்எல்ஏக்கள் வழங்கினார்

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த திருமழிசை சுந்தரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 121 மாணவர்களுக்கும், குத்தம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 63 மாணவர்களுக்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பெ.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெ.மகாதேவன், திமுக பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி, ஒன்றிய செயலாளர் டி.தேசிங்கு, பேரூராட்சி செயல்அலுவலர் மா. வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியர்கள் திருமழிசை சி.ரமேஷ், குத்தம்பாக்கம் மணி ஆகியோர் வரவேற்றனர். இந்த விழாவில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், திருமழிசை பள்ளிக்கு 50 பென்ச்சுகள், 200 நாற்காலிகள் வாங்கித்தர எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கி தர நான் இன்றே நான் கலெக்டருக்கு கடிதம் கொடுக்கிறேன் என கூறினார்.

இதனைத் தொடர்ந்து, திருமதிசை சுந்தரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பில் முதலிடம் பிடித்த 2 மாணவர்களுக்கு பேரூராட்சி தலைவர் ஜெ.மகாதேவன் சார்பில், தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார். பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் காவேரி, முத்துச்செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆரணி நகர திமுக செயலாளர் முத்து, பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமார், பொருளாளர் கரிகாலன், வார்டு கவுன்சிலர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் புனித வள்ளி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக துரை.சந்திரசேகர் எம்எல்ஏ கலந்துகொண்டு 11ம் வகுப்பு கல்வி பயிலும் 322 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

The post மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்எல்ஏக்கள் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thirumashai Sundaram Government Boys High School ,Poontamalli ,Kuthambakkam Government High School ,Principal Education Officer ,P. Ravichandran ,Municipal ,
× RELATED உரிமையாளர்களின் அலட்சியத்தால்...