×

கட்சியில் இணைந்த காங். கவுன்சிலர்களை கோமியம் தெளித்து புனிதப்படுத்திய பாஜ

ஜெய்ப்பூரில்: ராஜஸ்தானில் பாஜவில் இணைந்த காங்கிரஸ் கவுன்சிலர்களை புனிதப்படுத்தும் விழா நடைபெற்றது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் ஹெரிடேஜ் நகர் மேயர் முனேஷ் குர்ஜார் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதன் காரணமாக அவர் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து குசும் யாதவை பாஜ மேயராக நியமித்தது. இவருக்கு 7 காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர் ஒருவரும் ஆதரவு அளித்தனர். இவர்கள் 8 பேரும் பின்னர் பாஜவில் இணைந்தனர்.

இந்நிலையில் ஹவா மகால் பாஜ எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா பாஜவில் இணைந்த கவுன்சிலர்களை புனிதப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் பாஜவில் இணைந்த கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வேதமந்திரங்கள் முழங்க கங்கை நீர் மற்றும் கோமியம் தெளிக்கப்பட்டது. இதன் மூலமாக ஊழலில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட கவுன்சிலர்கள் புனிதமடைவார்கள் அவர்கள் சனாதனர்கள் ஆவார்கள் என்று பாஜ எம்எல்ஏ தெரிவித்தார்.

The post கட்சியில் இணைந்த காங். கவுன்சிலர்களை கோமியம் தெளித்து புனிதப்படுத்திய பாஜ appeared first on Dinakaran.

Tags : BAJA ,GOMIUM ,Jaipur ,Congress ,Bajaj ,Rajasthan ,Jaipur Heritage Nagar ,Munesh Gurjar ,Dinakaran ,
× RELATED உ.பி.யில் பழமையான மசூதியை இடித்து பாஜ...