- திருப்பதி யேமலையன் கோயில்
- சந்திரபாபு நாயுடு
- திருமலை
- சந்திரபாபு
- திருப்பதி எலுமாளையன் கோயில்
- திருப்பதி எலுமாளையன் கோயில்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அனைவரும் தேவஸ்தான விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் முதல்வர் சந்திரபாபு கேட்டுக்கொண்டுள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டரில், பக்தர்களின் உணர்வுகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு மாறாக யாரும் செயல்பட வேண்டாம். திருப்பதி ஏழுமலையான் கோயில் கோடிக்கணக்கான இந்துக்களின் மிகப்பெரிய ஆலயம். இந்த கோயில் நம் மாநிலத்தில் பெறுவதற்கு நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். எனவே ஏழுமலையானின் புனிதத்தைப் பாதுகாப்பதற்கும், பக்தர்களின் உணர்வுகளைப் பாதுகாப்பதற்கும் எங்களின் அரசு எப்போதும் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது.
திருமாலை தரிசிக்கச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் மிகுந்த பக்தியுடன் விரதம் மற்றும் சம்பிரதாயங்கள் கடைப்பிடித்து இறைவனை வழிபடுகிறார்கள். பக்தர்களால் மிகவும் புனிதமான தலமாக கருதப்படும் இந்த க்ஷேத்திரத்தின் புனிதத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு. எனவே ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அனைவரும் கோவில் விதிகள், ஆகம சாஸ்திர முறைகள் மற்றும் தேவஸ்தான விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பக்தர்களின் உணர்வுகளுக்கும், கோயில் சடங்குகளுக்கும் எதிராக யாரும் செயல்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் கேட்டு கொண்டுள்ளார். ஒருப்புறம் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் கோயிலில் லட்டு கலப்படம் செய்யப்பட்டதாக கூறி தனது அரசியலுக்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு அதன் புனிதத்தை கலங்கப்படுத்தியதால் அதற்கு பரிகாரமாக ஏழுமலையானை தரிசிக்க செல்வதாக கூறி இன்று திருப்பதி வரும் ஜெகன் மோகன் ரெட்டி நாளை ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இதற்கிடையே பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் தேவஸ்தான நிபந்தனையின்படி இந்து மதத்தையும் ஏழுமலையான் மீது நம்பிக்கையும் இருப்பதாக கூறி கையொப்பம் செலுத்திய பிறகு தரிசனத்திற்கு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அலிபிரியில் இருந்து அவரை செல்ல விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் எக்ஸ் பதிவு செய்துள்ளார். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி 5 ஆண்டுகள் முதல்வராகவும், அதற்கு முன்பு பலமுறை ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய முறைப்படி சமை தரிசனம் செய்துள்ளார். எனவே அவர் கையொப்பம் இடவேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அனைவரும் தேவஸ்தான விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்: சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் appeared first on Dinakaran.