×
Saravana Stores

சொத்து வரி 6% உயர்வு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.! அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி 6% உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மண்டல குழு கூட்டம் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையர் பொறுப்பு லலிதா முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கட்டிட இடிபாடுகள் ஒரு டன் வரை கொட்டினால் அபராதம் ரூ.2000ல் இருந்து 5000 ஆக உயர்வு, மரக்கழிவு பொது இடத்தில் கொட்டினால் அபராதம் ரூ.200 ல் இருந்து 2000 ஆக உயர்வு, பொது இடத்தில் திடக்கழிவுகள் எரித்தால் 1000ல் இருந்து 5000 ஆக அதிகரிப்பு, வியாபாரிகள் குப்பை தொட்டி, குப்பை கூடை இல்லாமல் இருந்தால் அபராதம் 100ல் இருந்து 1000ஆக உயர்த்த நடவடிக்கை, பொது இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்தி தூய்மைபடுத்தாமல் இருந்தால் 5000 அபராதமாக வசூலிக்கப்படும் ( மெரீனா, பெசண்ட் நகர், அண்ணா நகர்) உள்ளிட்ட 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, மாநகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தாமாகவே 6% சொத்துவரி உயர்த்துவதற்கான தீர்மானம் விவாதத்திற்கு வந்தது. இதற்கு அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சொத்து வரி தொடர்பான தீர்மானத்தின் போது காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சிவராஜசேகரன் பேசுகையில், சொத்து வரி உயர்வை மாநகராட்சி கைவிட வேண்டும். மேலும், மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மாநகராட்சி இருப்பது போல், நிலைக்குழு தலைவர்கள் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். இதன் மூலம் மற்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

The post சொத்து வரி 6% உயர்வு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.! அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Congress ,Supreme Court ,Chennai Municipal Council ,Municipal Zonal Committee ,Ribbon House ,Deputy ,Mayor ,Mahesh Kumar ,Chennai Municipal Meeting ,Dinakaran ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...