×
Saravana Stores

உதகையில் இரண்டாவது சீசன்: அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி

உதகை: உதகையில் இரண்டாவது சீசனை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி தொடங்கியது. தற்போது 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகை வர தொடங்கியுள்ளனர்.

தாவரவியல் பூங்காவில் உள்ள அலங்கார மேடைகளில் 70 வகையான மலர் ரகங்கள் 10,000 தொட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு மலர் கண்காட்சி ஒரு மாதம் நடைபெற உள்ளது. 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்கா முழுவதும் 4.5 லட்சம் மலர் செடிகள் பூத்து குலுங்குகின்றன.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்கள் இரண்டாவது சீசன் காலம் ஆகும். இந்த ஆண்டிற்கான இரண்டாவது சீசன் தற்போது தொடங்கி இருப்பதால் உதகை தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. மேலும் 125 ரகங்களை சேர்ந்த 4 லட்சம் மலர் செடிகள் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள், மரங்களின் அடிவாரத்தில் நடவு செய்யப்பட்டன. அதில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்கான மலர் கண்காட்சி தொடங்கி உள்ளது. பசுமை தமிழகம் என்ற கருத்தை வலியுறுத்தி மலர்களால் ஆன வடிவமைப்பு காட்சி திடலில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 7,500 மலர் தொட்டிகளை கொண்டு புல்வெளியில் சந்திரயான் விண்கல அலங்காரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

 

 

The post உதகையில் இரண்டாவது சீசன்: அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : UDAKA ,STATE BOTANICAL GARDEN ,Uthaka ,
× RELATED ரிசார்ட் விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு