×

ஏடிஎம் கொள்ளையர்களிடம் இருந்து கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்: போலீஸ் தகவல்

நாமக்கல்: கொள்ளையர்களிடம் இருந்து கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. கொள்ளையர்களிடம் இருந்து துப்பாக்கி ஏதும் கைப்பற்றப்படவில்லை. கொள்ளையர்களின் கண்டெய்னரில் இருந்து மீட்கப்பட்ட காரில் தடயவியல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் குமாரபாளையம் அருகே போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொள்ளையனின் பெயர் தெரிந்தது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொள்ளையன் பெயர் ஜூமாலுதீன். துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட மற்றொரு கொள்ளையன் பெயர் அசார் அலி என தெரிய வந்துள்ளது என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post ஏடிஎம் கொள்ளையர்களிடம் இருந்து கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்: போலீஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sharp ,NAMAKAL ,Namakkal Kumarapaliam ,Dinakaran ,
× RELATED மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் அருகே மெத்தபெட்டமைன் விற்ற ஐடி ஊழியர் கைது