*விபத்து நடக்காமல் பாதுகாக்க வேண்டும்
*போக்குவரத்து அலுவலருக்கு கலெக்டர் உத்தரவு
பெரம்பலூர் : சாலை விதிகளைப் பின்பற்றி- ஹெல்மெட் அணிந்திருப்ப வருக்கு ஊக்கப் பரிசு, ஹெல்மெட் அணியாதவ ருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பெரம்பலூர் வட்டார போக் குவரத்து அலுவலருக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளார்.பெரம்பலூர் மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (26 ஆம் தேதி) வியாழக்கிழமை மாலைநடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித் தார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சட்டம்- ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட வாய்ப் புள்ள சம்பவங்கள் குறித் தும் அதற்காக எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு செய்தார். இரு சமூகத்தின ரிடையே பல்வேறு சூழல்க ளால் ஏற்படும் பிரச்சனைக ளுக்கு அமைதிக்குழு அமைத்து சமரசப் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணவேண்டும் என்று வருவாய்த் துறையி னருக்கும், காவல்துறையி னருக்கும் மாவட்டக் கலெக் டர் அறிவுறுத்தினார்.
உரிய முன் அனுமதி இல்லாமல் நகரப் பகுதியில் அதிக அளவில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவது தவிர்க்கப் பட வேண்டும். அவ்வாறு முன் அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகள் வைப்போர் மீதும், அச்சிடும் நிறுவனங்கள் மீதும் சட்டப் படி உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் நகராட்சி ஆணையருக்கு உத்தர விட்ட மாவட்டக் கலெக்டர் முன்அனுமதி பெற்று வைக் கப்படும் விளம்பர பதாகை களும் உரிய காலத்திற்குள் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறி வுறுத்தினார்.
புதிய மற்றும் பழைய பேருந்துநிலையம் அமைந்துள்ள பகுதி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடை களை அப்புறப்படுத்த வேண்டும். அனுமதி இல் லாமல் ஷேர் ஆட்டோக்கள் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப் பட வேண்டும் என்றும் கூட் டத்தில் விவாதிக்கப்பட்டது.கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்த்தில் உயிரிழிப்புகளை ஏற்படுத் திய விபத்துகள் ஏற்பட்ட இடங்கள், எந்த காரணத் தால் விபத்து ஏற்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் விரிவாக எடுத் துரைத்தனர்.
அவ்வாறு விபத்துகள் ஏற்பட்ட இடத் தில் இனிவரும் காலங்க ளில் விபத்து நடைபெறா மல் இருக்க என்ன வகை யில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதுஎன்பது குறித்து ஒவ்வொரு பகுதிவாரியாக மாவட்டக் கலெக்டர் கேட்ட றிந்தார். பெரும்பாலான விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளிடம் ஹெல் மெட் அணிவதன் முக்கியத் துவம்குறித்து விழிப்புண ர்வு ஏற்படுத்த வேண்டும், சாலை விதிகளைப் பின் பற்றி ஹெல்மெட்அணிந்து வாகனம் ஓட்டுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளை வழங்க வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலரு க்கு மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாநில நெடுஞ்சா லைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்திய மாவட்டக் கலெக்டர், பல இடங்களில் வேகத்தடைகள் இருப்பதே தெரியாத வகையில் உள் ளது, ஏற்கனவே வேகத் தடைகள் இருக்கும் இடங்க ளில் அவற்றில் வெள்ளை வண்ணம் பூசவும், விபத்து நடக்க வாய்ப்புள்ள பகுதி ளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் (ரிஃப்லெக்டர்கள்) பிரதிப லிப்பான்கள் வைக்கவும் நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடி வேல்பிரபு, சப்.கலெக்டர், பெரம்பலூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், மங்கல மேடு டிஎஸ்பி தனசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், மாவட்டக் கலெக்டர் அலுவலக மேலா ளர்(குற்றவியல்) சிவா, அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விதிகளை பின்பற்றி ஹெல்மெட் அணிந்து இருந்தால் ஊக்கப்பரிசு appeared first on Dinakaran.