- தேசிய ஊட்டச்சத்து கருத்தரங்கு
- பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
- பெரம்பலூர்
- தேசிய ஊட்டச்சத்து மாதம்
- மாவட்ட அரசு பொது மருத்துவமனை
- மாவட்ட சுகாதார சேவைகள்
- கூட்டு இயக்குனர்
- டாக்டர்
- மாரிமுத்து
- பெரம்பலூர் மாவட்ட அரசு
- தலைமை…
- மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
- தின மலர்
பெரம்பலூர், செப். 27: பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து கலந்து கொண்டார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் நேற்று (26 ம் தேதி) வியாழக்கிழமை காலை, 2024 ம் ஆண்டுக் கான, தேசிய ஊட்டச்சத்து மாதம் (செப்டம்பர்) குறித்த சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம், பெரம்பலூர் தந்தை ரோவர் நர்சிங் கல்லூரி, கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரி, பெரம்பலூர் சென்டினியல் லயன் சங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியன இணைந்து நடத்திய ஊட்டச்சத்து சிறப்பு விழாவிற்கு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மருத்து நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கலா முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட ஊட்டச்சத்து மறு வாழ்வு மைய ஆலோசகர் ஜூலி வரவேற்றார்.
இந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இருக்கை மருத்துவர் டாக்டர் சரவணன், முதன்மை குடிமை மருத்துவர் டாக்டர் வேல்முருகன், முதுநிலை குடிமை மருத்துவர் டாக்டர் சிவராமன், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் ஜெய, பெரம்பலூர் சென்டினியல் லயன் சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர்கலந்துகொண்டு கருத்துரை பேசினர். முன்னதாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து ஊட்டச் சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை பார்வை யிட்டார். மேலும் கைக் குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெண்களிடம் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சி களில் ஊட்டச்சத்து மறு வாழ்வு மைய ஊழியர்கள், ரோவர்,கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரி மாணவிகள், ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், சென்டினி யல் லயன் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்ட னர். முடிவில் டாக்டர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.
The post பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் தேசிய ஊட்டச்சத்து கருத்தரங்கம், கண்காட்சி appeared first on Dinakaran.