- பிரான்ஸ்
- இந்தியா
- ஐநா பாதுகாப்பு கவுன்சில்
- ஜனாதிபதி
- மக்ரோன்
- நியூயார்க்
- இம்மானுவேல் மக்ரோன்
- இனா பாதுகாப்பு கவுன்சில்
- ஐ.நா. பொதுச் சபை
- ஐக்கிய நாடுகள்
நியூயார்க்:ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆதரவு தெரிவித்துள்ளார். ஐநா பொதுசபை கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்றுமுன்தினம் பேசுகையில்,‘‘ நம்மிடம் உள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் தடைபட்டுள்ளது. ஐநாவை மேலும் திறனுடையதாக மாற்ற வேண்டும். அதிகளவு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அது இருக்க வேண்டும்.
அதனால் தான் பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவதை பிரான்ஸ் ஆதரிக்கிறது. ஜெர்மனி,ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அதே போல் ஆப்ரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக 2 நாடுகளை தேர்ந்தெடுப்பதை ஆப்ரிக்கா முடிவு செய்து கொள்ளலாம். பாதுகாப்பு கவுன்சிலின் பணி முறைகளில் மாற்றம், பெரிய குற்றச் செயல்களில் வீட்டோ உரிமையின் வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும்’’ என்றார்.
The post ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினர் ஆக்க பிரான்ஸ் ஆதரவு: அதிபர் மேக்ரான் பேச்சு appeared first on Dinakaran.