- காங்கிரஸ்
- புது தில்லி
- அமலாக்க இயக்குநரகம்
- Aryana
- சட்டமன்ற உறுப்பினர்
- ரவ்தான் சிங்
- சட்டசபை
- ஹரியானா
- மஹேந்திரகர்
- தின மலர்
புதுடெல்லி: வங்கியில் பணமோசடி தொடர்பாக அரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ ராவ்தன் சிங் தொடர்புடைய ரூ.44 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் அக்.5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மகேந்திரகர் தொகுதி எம்.எல்.ஏவும், அதே தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள ராவ்தன் சிங் மீது அமலாக்கத்துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கியில் ரூ.1392 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் எம்எல்ஏ ராவ்தன்சிங், அவரது மகன் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான ரூ.44 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
The post வங்கி மோசடி வழக்கு காங்கிரஸ் எம்எல்ஏவின் ரூ.44 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.