×
Saravana Stores

பீகாரில் சோகம் புனித நீராடிய 37 குழந்தைகள் உள்பட 46 பேர் மூழ்கி பலி

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடந்த புனித நீராட்டு விழாவில் 37 குழந்தைகள் உள்பட 46 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டனர். பீகார் மாநிலத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகை ஜிவித்புத்ரிகா. இந்த பண்டிகை பீகார் மட்டுமல்லாமல் ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், நேபாள நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. அஷ்டமி திதியை முன்னிட்டு இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவின் போது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடுவது வழக்கம். அவ்வாறு புனித நீராடியபோது பீகாரில் நடந்த பல்வேறு சம்பவங்களில் 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 3 பேர் காணாமல் போயுள்ளனர். பீகார் அரசு இதனை நேற்று உறுதிப்படுத்தியது. இதுவரை 15 மாவட்டங்களில் மொத்தம் 43 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 6 பேரை தேடும் பணியில் மாநில பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

The post பீகாரில் சோகம் புனித நீராடிய 37 குழந்தைகள் உள்பட 46 பேர் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna ,Jivitputrika ,
× RELATED பாட்னாவில் கடும் போக்குவரத்து நெரிசல்