புதுடெல்லி: தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் 6 மாதத்துக்கு ஒரு முறை குறைந்த பட்ச ஊதியத்தை ஒன்றிய அரசு மாற்றி வருகிறது. இந்தநிலையில் அக்.1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விகிதங்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கட்டிடம் கட்டுதல், சுமைகளை ஏற்றுதல் மற்றும் இறக்குதல், கண்காணித்தல், துடைத்தல், சுத்தம் செய்தல், வீட்டு பராமரிப்பு, சுரங்கம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.783 ஆகவும், மாதத்திற்கு ரூ.20,358ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்ச திறன் கொண்டவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.868 (மாதம் ரூ.22,568)ம், திறன் உடைய தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 954ம் (மாதம் ரூ.24,804), மிகவும் திறமையான, ஆயுதங்களுடன் கூடிய கண்காணிப்பு பணி செய்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,035ம் (மாதம் ரூ.26,910) ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
The post அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.783ஆக உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.