×

ஜம்முவில் ராணுவ வீரர் மர்ம மரணம்

ஜெய்ப்பூர்; ஜம்முவில் பணியில் இருந்த ராணுவ மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் ராஜஸ்தானில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தானின் பிகனேர் மாவட்டத்தில் உள்ள ராஞ்சு கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் ராம்ஸ்வரூப் கஸ்வான். இவர் ஜம்முவின் அனந்த்நாக் மாவட்டத்தில் பணியில் இருந்தார்.

இந்நிலையில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் இறந்துகிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாவட்ட ராணுவ வீரர் நல அலுவலர் அறிக்கை வெளியிட்டார். உயிரிழந்த ராணுவ வீரர் ராம்ஸ்வரூபுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராஜஸ்தானின் பிகனேர் மாவட்டத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post ஜம்முவில் ராணுவ வீரர் மர்ம மரணம் appeared first on Dinakaran.

Tags : Jammu ,Tarna ,Rajasthan ,Jaipur ,Ramswaroob Kaswan ,Ranchu ,Bikaner district of Rajasthan ,Dinakaran ,
× RELATED 495 கிராம் போதைப்பொருளுடன்ஜம்மு சர்வதேச எல்லையில் பாக். டிரோன் பறிமுதல்