×
Saravana Stores

மணிப்பூரில் ஆயுதம், வெடிமருந்து பறிமுதல்

இம்பால்: மணிப்பூர் மாநிலம், தவுபால் மாவட்டத்தில் உள்ள டெக்சாம் மேனிங் சிங் பகுதியில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் மணிப்பூர் போலீசார் இணைந்து நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, துப்பாக்கிகள், தோட்டாக்கள்,வெடிகுண்டுகள், எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுராசந்திரப்பூர் மாவட்டத்தில் ராணுவம்,பிஎஸ்எப் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில், கையெறி குண்டுகள்,துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

The post மணிப்பூரில் ஆயுதம், வெடிமருந்து பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Assam Rifles ,Manipur Police ,Texam Manning Singh ,Dawipal district, ,
× RELATED மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்