×
Saravana Stores

விடுதி மாணவிகள் 21 பேர் பலாத்காரம் வார்டனுக்கு தூக்கு தண்டனை

இடாநகர்: அருணாச்சல பிரதேசம்,ஷி- யோமி மாவட்டத்தில் அரசு உறைவிட பள்ளி உள்ளது. இதில் ஹாஸ்டல் வார்டனாக இருந்தவர் யும்கென் பாக்ரா. இந்தி ஆசிரியை மார்போம் நுகெம்டிர் மற்றும் தலைமை ஆசிரியராக இருந்தவர் சிங்டன் யோர்பென். கடந்த 2019 முதல் 2022 வரை ஹாஸ்டலில் இருந்த 21 மாணவிகளை பாக்ரா பலாத்காரம் செய்துள்ளார். இதில், 15 பேர் 6 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள்.இந்த பள்ளியில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த ஆண்டு இரண்டு மாணவிகள் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து மோனிகோங் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தான் 21 மாணவிகளை பாக்ரா சீரழித்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு யூபியாவில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்ராவுக்கு தூக்கு தண்டனை விதித்தார். அவருக்கு உடைந்தையாக இருந்த 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

The post விடுதி மாணவிகள் 21 பேர் பலாத்காரம் வார்டனுக்கு தூக்கு தண்டனை appeared first on Dinakaran.

Tags : Warden ,Itanagar ,Government ,Shi-Yomi District, Arunachal Pradesh ,Yumken Bagra ,Marbom Nukemdir ,Headmaster ,Sington Yorben ,
× RELATED போதைப் பொருள் ஆலை நடத்திய திகார் சிறை வார்டன் உட்பட 5 பேர் கைது