×
Saravana Stores

தல்லாகுளம் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழா அக்.4ல் தொடக்கம்: அக்.14ல் தெப்ப உற்சவம் 

மதுரை, செப். 27: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலின் உபகோயிலான மதுரை பிரசன்ன வெங்கடாஜபதி பெருமாள் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டுக்கான விழா அக்டோர் 4ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், அக்.4ம் தேதி காலை 9.05 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இதையடுத்து அன்று முதல் அக்.13ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் காலை, மாலை என இருவேளைகளில் பல்ேவறு அலங்காரங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் அக்.14ம் தேதி காலை 9.45 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மற்றும் மாலையில் 6 மணிக்கு மேல் என இரு நேரங்களில் நடைபெற உள்ளது. அக்.15ம் தேதி உற்வச சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாஜலம், இணை ஆணையர் செல்லத்துரை, அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

The post தல்லாகுளம் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழா அக்.4ல் தொடக்கம்: அக்.14ல் தெப்ப உற்சவம்  appeared first on Dinakaran.

Tags : Puratasi festival ,Dallakulam Perumal temple ,Theppa Utsavam ,Madurai ,Madurai Prasanna Venkatajapati Perumal Temple ,Kallaghar Temple ,Alagharkovil ,Puratasi Brahmotsava festival ,Tallakulam Perumal Temple ,
× RELATED புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி...