- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராமதாஸ் அங்கம்
- திண்டிவனத்தில்
- ஜனாதிபதி
- ராமதாஸ்
- பாமா
- Bamaka
- திலாபுரம்
- விழுப்புரம் மாவட்டம்
- இலங்கை
- தமிழ்நாடு
- ராமதாஸ் அங்கம்
திண்டிவனம்: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது புதிய இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியில் அனுர குமார திச நாயக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிங்களர்களையும் தமிழர்களையும் இணைத்து செயல்படுவேன் என கூறினாலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை. ஜனதாமுக்தி சிங்கள பேரினத்தின் தலைவராக தற்போதைய அதிபர் இருந்துள்ளார். அவர் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஊக்குவித்தவர். இந்தியா இலங்கை உறவை வலுப்படுத்த திச நாயக இருப்பாரா என்பது ஐயமாகத்தான் உள்ளது.
எனவே, இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணுதல், போர் குற்றங்களுக்கு தண்டித்தல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு வெளியுறவுக்கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்.தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என கூறுவது ஏமாற்று வேலை. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். லோக் ஆயுக்தா வலுப்படுத்தப்பட வேண்டும். கர்நாடகாவில் உள்ளது போன்று தமிழகத்தில் வலிமையாக இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்; புதிய இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்: ராமதாஸ் வேதனை appeared first on Dinakaran.