- பதிவகம் டிஐஜி
- ரவீந்தரநாத்
- சென்னை
- ஐ. ஜி. பதிவு
- பதிவு மாநில பணி அதிகாரிகள் சங்கம்
- திக் ரவீந்திரநாத்
- தம்பரம் அறக்கட்டளை
- சென்னை சந்தோம் நெடுஞ்சாலை
- டிஐஜி
- தின மலர்
சென்னை: தாம்பரம் சார்பதிவகத்தில் நடந்துள்ள முறைகேட்டில் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்ட பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜியிடம் பதிவுத்துறை மாநில பணி அலுவலர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பதிவுத்துறை மாநில பணி அலுவலர் சங்கம் மாநில தலைவர் செந்தூர்பாண்டியன் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் நேற்று புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், தாம்பரம் சார்பதிவகத்தில் நடந்துள்ள முறைகேட்டில் தொடர்புபடுத்தி தற்போது சேலம் துணை பதிவுத்துறை தலைவராக பணியாற்றி வரும் ரவீந்திரநாத், தென்ெசன்னை மாவட்ட பதிவாளராக இருந்த போது ஒளிவருடல் செய்யப்பட்ட ஆவணத்தை பரிசீலித்து அட்டவணை திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். எனவே தற்போது சேலம் துணைப்பதிவுத்துறை தலைவராக பணியாற்றிவரும் ரவீந்திரநாத்தை உடனடியாக கைது நடவடிக்கையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்தை விடுவிக்க சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.