×
Saravana Stores

அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஓய்வறை 3 வாரங்களில் அரசு நிதி ஒதுக்க ஐகோர்ட் உத்தரவு


சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் காட்சி பொருட்களாக வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்தி அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்காக, தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 8.55 கோடி செலவில் தனி ஓய்வறைகள் கட்டப்பட உள்ளன. பள்ளிகளில் நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக தகவல் சேகரித்து வருகிறோம் என்றார். இதையடுத்து, மாணவிகளுக்கான இந்த 8.55 கோடியை 3 வாரங்களில் ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

The post அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஓய்வறை 3 வாரங்களில் அரசு நிதி ஒதுக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Madras High Court ,
× RELATED கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக பதிவான வழக்குகளின் விவரங்களை தர ஆணை!