×

மரங்களில் ஒளிரும் ரிப்ளக்டர் பொருத்தம்

தர்மபுரி, செப்.27: நெடுஞ்சாலைத்துறை சார்பில், பொம்மிடி – பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் இரவில் ஒளிரும் ரிப்ளக்டர்கள் மரங்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டம் சார்பில், பொம்மிடியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரத்தில் சாலை தெளிவாக தெரிவதற்காக, சாலையோரம் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட புளியமரங்களில் இரவில் ஒளிரும் சிகப்பு ரிப்ளக்டர்கள் பொருத்தும் பணி உதவி கோட்டப்பொறியாளர் சண்முகம் மேற்பார்வையில், உதவி பொறியாளர் நரசிம்மன் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். முன்னதாக மரங்களில் இருந்த தனியார் விளம்பர பலகைகளை அகற்றினர்.

The post மரங்களில் ஒளிரும் ரிப்ளக்டர் பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Highways Department ,Bommidi-Pappirettipatti road ,Paparettipatti Highway Department Assistance Team ,Pommidi ,Paparettipatti ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் அருகே திருக்குவளை பகுதியில் பாலங்கள் சீரமைக்கும் பணி