×
Saravana Stores

மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி கங்கை அம்மன் கோவில் பகுதி, வாணிய தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (59), ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இவரது வீட்டில் இருந்த மரத்தில் தொரட்டி கொம்பை வைத்து மாங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தொரட்டி கொம்பு அந்த வழியாக மேலே சென்ற மின் கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் கணேசன் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் இறந்து போன கணேசன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாங்காய் பறித்தபோது மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலியான இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Ganesan ,Vaniya Street, Gangai Amman Temple ,Torati ,Dinakaran ,
× RELATED குன்றத்தூரில் பிரபல ஓட்டலில்...