- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பஹ்ரைன் கடற்கரை
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- மத்திய அமைச்சர்
- சென்னை
- ஒன்றிய வெளிவிவகாரம்
- அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- பஹ்ரைன் கடலோர காவல்படை
- தின மலர்
சென்னை: பக்ரைன் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவி வழங்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டிற்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அங்கு எல்லை தாண்டிச் சென்றதாக பக்ரைன் கடலோர காவல் படையினரால் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். பக்ரைன் கடலோர காவல்படையினரின் இந்த கைது நடவடிக்கையின் காரணமாக, மீனவர்களது வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள அவர்களது குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
The post பக்ரைன் கடலோர காவல்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 28 பேரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.