நியூயார்க்: இத்தாலி பிரதமர் மெலோனியுடன் எலான் மக்ஸ் ேடட்டிங் செய்கிறாரா என்பதற்கு அவரே பதிலளித்துள்ளார். அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலக பணக்காரருக்கும் தொழிலதிபருமான 53 வயதாகும் எலான் மஸ்க்கும், 47 வயதாகும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவி வருகிறது. நியூயார்க்கில் சம்பீத்தில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் மெலோனிக்கு எலான் மஸ்க் விருது வழங்கி பேசுகையில், ‘மெலோனி, இத்தாலி பிரதமராக தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். நான் பார்த்து வியக்கும் மெலோனிக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி. அவர் உண்மையான நேர்மையான ஒருவர்’ என்றார்.
இப்படி அவர், மெலோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவருக்கு மெலோனியும், தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க், மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்று அவர் மெலோனியை புகழும் வீடியோவையும், இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். அதை எலான் மஸ்க், முற்றிலுமாக மறுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் என் தாயாருடன் பங்கேற்றேன். அதிபர் மெலோனியுடன் எந்த காதல் உறவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
The post இத்தாலி பிரதமர் மெலோனியுடன் டேட்டிங்கா; எலான் மஸ்க் பதில்: வைரலாகும் புகைப்படங்களால் பரபரப்பு appeared first on Dinakaran.