×

ரூ.5.64 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் வழியில் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசுக்கு சொந்தமான ₹5.64 கோடி மதிப்பிலான நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்டனர். திருவள்ளூர் நகராட்சி, பெரும்பாக்கம் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழியில் அரசுக்கு சொந்தமான 37 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை  மாவட்ட பெருந்திட்ட வளாகம் அமைக்க கடந்த 1997ம் ஆண்டு நில உரிமையாளரிடமிருந்து நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு கையகப்படுத்திய இந்த நிலத்தை அதன் உரிமையாளர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றி முள்வேலி அமைக்க சிமென்ட் கம்பங்களை நட்டு வைத்திருந்தார்.இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற வருவாய் கோட்டாட்சியர் எம்.ரமேஷ், திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த 37 சென்ட் நிலத்தை சுற்றி முள்வேலி அமைப்பதற்காக நட்டு வைத்திருந்த சிமென்ட் கம்பங்களை அகற்றி நிலத்தை மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ₹5.64 கோடி என்பது குறிப்பிடத்தக்கது….

The post ரூ.5.64 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Government Land Recovery ,Thiruvallur ,Superintendent's Office ,Thiruvallur District Police Department ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...