வாஷிங்டன்: மெட்டா நிறுவனம் தனது முன்மாதிரி AR கண் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மெட்டா நிறுவனத்தில் கனெக்ட் என்ற மாநாடு நடைபெற்றது. புதிய தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகம் செய்யும் வகையில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் அந்த நிறுவன தலைவர் மார்க் பேசினார்.அப்போது மெட்டாவின் புதிய AR கண் கண்ணாடியை அவர் அறிமுகம் செய்தார். அந்த கண்ணாடிக்கு ஓரியன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் தங்களின் கை அசைவுகள் மற்றும் குரல் மூலம் அந்த கண்ணாடிக்கு தகவல்களைஅனுப்ப முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் எங்களை நினைவில் வைத்து கொள்வது, ஸ்கேனிங், தேடுபொருள் என பல வசதிகள் இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் மார்க் அறிவித்தார். இதே போல மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாதனங்களில் அறிமுகம் ஆக உள்ள புதிய வசதிகளையும் அவர் அறிவித்தார் வீடியோகளை நொடி பொழுதில் மொழி பெயர்க்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளதாக அவர் கூறியது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
The post புதிய AR கண் கண்ணாடியை அறிமுகம் செய்த மெட்டா: குரல், கை அசைவுகள் மூலம் தகவல் பரிமாற்றம் appeared first on Dinakaran.