×
Saravana Stores

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், அஜீரண கோளாறுக்கு பயன்படுத்தப்படும் 50க்கும் மேற்பட்ட மருந்துகள் தரமற்றவை : CDSCO அதிர்ச்சி தகவல்

டெல்லி : உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், அஜீரண கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் 50க்கும் மேற்பட்ட மருந்துகள் தரமற்றவை என மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளை சிடிஎஸ்சிஓ எனும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO or Central Drugs Standards Control Organisation)ஆய்வு செய்வது வழக்கம். இதன் மூலம் போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்படும்.

இந்நிலையில், சமீபத்தில் சந்தேகத்திற்குரிய மாத்திரை, மருந்துகளை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்தது. இந்த ஆய்வின்போது 53 மாத்திரைகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் டி3 ஷெல்கால் (Shelcal), வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி குறைபாட்டுக்கான softgels, antiacid Pan-D, Paracetamol tablets IP 500 mg, சர்க்கரை நோய்க்கான Glimepiride, உயர் ரத்த அழுத்தத்திற்கான Telmisartan உள்ளிட்ட மாத்திரைகள் அடங்கும்.

இதுதவிர வயிற்று தொற்று பிரச்சனைக்கு எடுத்து கொள்ளப்படும் மெட்ரோனிடாசோல், அன்டிபயோடிக்ஸ் மாத்திரையான Clavam 625, Pan D, குழந்தைகளுக்கான பாக்டீரியா தொற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படும்ஹெட்டரோவின் செபோடெம் எக்ஸ்பி 50 மாத்திரைகளும் தரமின்றி உள்ளது. இதனிடையே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகள் போலியானவை, அவை சந்தையில் மிக எளிதில் கிடைக்கின்றன. இவற்றை நாங்கள் உற்பத்தி செய்ய வில்லை என அந்தந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. மேலும், தரமற்ற மருந்துகள் குறித்த விரிவா‌ன தகவல்களை cdsco.gov.in இணையத்தின் மூலமாக கோப்பாக காணலாம்.

The post இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், அஜீரண கோளாறுக்கு பயன்படுத்தப்படும் 50க்கும் மேற்பட்ட மருந்துகள் தரமற்றவை : CDSCO அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Drug Quality Control System ,CDSCO ,Dinakaran ,
× RELATED வாட்ஸ் ஆப்-ஐ தடை செய்யக் கோரிய மனு தள்ளுபடி