×

ஐஸ்வர்யா பற்றி மணிரத்னம்

கடந்த 1994ல் உலக அழகி பட்டம் வென்றவர், ஐஸ்வர்யா ராய். அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மருமகள், பாலிவுட் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவி என்ற அந்தஸ்து கொண்ட அவர், தமிழில் 1997ல் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்துடன் ‘ஜீன்ஸ்’, ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித் குமாருடன் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரமுடன் ‘ராவணன்’, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் ‘எந்திரன்’, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் 1’ மற்றும் ‘2’ல் நடித்தார்.

இந்நிலையில், மும்பையில் நடந்த ‘பொன்னியின் செல்வன் 2’ நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா ராய் பற்றிய கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், ‘பொதுவாக திரைப்பட இயக்குனர்கள் என்பவர்கள் அதிக சுயநலவாதிகள். அவர்கள் தங்கள் படத்தைப் பற்றி அதிக கவனத்துடன் சிந்தித்து செயல்படுவார்கள். நான் ஐஸ்வர்யா ராயை எவ்வளவு நேசித்தாலும், எனது படத்தில் அமைந்துள்ள கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தால் மட்டுமே அவரை நடிக்க அழைப்பேன். அவரும் உடனே வந்து நடிப்பார்’ என்றார்.

The post ஐஸ்வர்யா பற்றி மணிரத்னம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mani Ratnam ,Aishwarya ,Aishwarya Rai ,All ,Amitabh Bachchan ,Bollywood ,Abhishek Bachchan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித், விஜய் ரசிகர்கள் பற்றி மணிரத்னம் பரபரப்பு கருத்து