×

பிரதமர் மோடிக்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தாக்கு!!

பெங்களூரு : முதலமைச்சர் பதவியை 2500 கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டதாக சொந்த கட்சி தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் மோடிக்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, முதலமைச்சர் பதவியை விற்று விட்டதாக தனது சொந்த கட்சியினர் மீதே பாஜக எம்எல்ஏ ஒருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டிய பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். பாஜக எம்எல்ஏக்களின் ஊழல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் மவுனம் காப்பதன் மூலம் இந்த ஊழல்களுக்கு தாங்களும் உடந்தையா என்றும் பிரதமர் மோடிக்கு சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

ஊழல்கள் குறித்து பேசும் பிரதமர் மோடி கர்நாடகாவில், ஊழல் கரை இல்லாத பாஜக தலைவர்களை காட்டினால் தங்களை கர்நாடகாவிற்கு வரவழைத்து கவுரவிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக பாஜகவில் இணைந்த எதிர்க்கட்சி தலைவர்களின் ஊழல்களை சுத்தம் செய்து, அவர்களை பாஜக அலுவலகம், உத்தமர்களாய் மாற்றியதை இந்த தேசம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதை கர்நாடக மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட சித்தராமையா, இந்த விவகாரத்தில் தன்னுடன் விவாதிக்க தயாராக இருந்தால் தான் எப்போதும் தயார் என்று தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடிக்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தாக்கு!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Karnataka ,Chief Minister Sidharamaiah ,Bangalore ,Chief Minister ,Siddaramaiah ,Modi ,Sidharamaiah ,Dinakaran ,
× RELATED பாரதியார் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார், பிரதமர் மோடி