×
Saravana Stores

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு

பெரம்பலூர், செப். 26: பெரம்பலூர் மாவட்ட விவ சாயிகளுக்கு எண்ணெய்ப் பனை சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் எண் ணெய்பனை நடவுப் பணியை மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத் தார். எண்ணெய் பனையை விவசாயிகள் ஆர்வமாக சாகுபடி செய்து, அதிக மகசூல் பெற்று பயனடைய கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா, மலையாளப்பட்டி ஊராட்சி, கவுண்டர் பாளையத்தில் உள்ள விவசாய நிலத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், எண்ணெய் பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில், 15 ஏக்கரில் மாபெரும் எண்ணெய்ப் பனை நடவு பணியினை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று (25ம்தேதி) தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் பாமாயில் அதிகளவு பயன்படுத்தப் பட்டுவரும் நிலையில், பெருமளவிலான பாமாயில், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் சமையல்எண்ணெய் பயன்பாட்டினை கருத்தில் கொண்டும், சமையல் எண்ணெய்இறக்குமதியை குறைத்திடவும், நம் நாட்டிலே உற்பத்தி செய்து தன்னிறைவு அடையும் பொருட்டு, ஒன்றிய அரசு தேசிய சமையல் எண்ணெய் இயக்க திட்டம் மூலம், எண்ணெய் பனை சாகுபடியை ஊக்குவித்து வருகிறது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, வேப்பூர் மற்றும் ஆலத்தூர் வட்டாரங்களில் சுமார் 40 எக்டர் நிலப் பரப்பில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப் பட்டுள்ளது. தற்சமயம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், எண்ணெய் பனைத்திட்டம் – 2024-25 திட்ட செயலாக்கத்திற்கு பொருள் இலக்காக 20 எக்டர் பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை ஊக்குவிக்க மானிய விலையில் எண் ணெய் பனை கன்றுகள் வழங்கப்பட உள்ளது குறிப் பிடத்தக்கது. எனவே, எண் ணெய்ப் பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டி ருந்த எண்ணெய் பனை தொடர்பான பொருட்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந் ததை மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டு, இப்பயிர் சாகுபடியால் விவசாயிக ளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும்,எண்ணெய் பனை சாகுபடி மேலாண்மை குறித்து, இப்பகுதியில் எண்ணெய் பனை பயிரிட் டுள்ள விவசாய நிலத் திற்குச் சென்று பார்வை யிட்ட மாவட்ட கலெக்டர், விவசாயியிடம் ஆண்டுக்கு எத்தனை முறை பாமாயில் பழக்குலைகள் சாகுபடி செய்யப்படுகிறது, இதன் மூலம் எவ்வளவு வரு மானம் கிடைக்கப் பெறு கிறது,

அரசு மானியம் முழு வதும் கிடைக்கப் பெறு கிறதா எனவும் மொத்த மகசூல் விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், விவசாயிகள் இந்த விழிப்புணர்வு முகாமினை உரிய முறையில் பயன் படுத்திக் கொண்டு லாபக ரமான பயிரான, எண் ணெய்ப் பனையை விவ சாயிகள் ஆர்வமாக சாகு படி செய்து அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண் டும் என்றும் அறிவுறுத்தினார். இதில் பெரம் பலூர் மாவட்ட தோட்டக் கலைத்துறை துணை சத்யா, வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், வேப்பந்தட்டை அட்மா தலைவர்ஜெகதீசன், வேப்பந்தட்டை ஒன்றியக் குழு துணைத்தலைவர் ரெங்கராஜ், தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் (வேப்பந்தட்டை) விஜய காண்டீபன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயக் கிருஷ் ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur Collector ,Perambalur ,District Collector ,Grace Bachau ,Neipan ,Viva ,Sais ,Dinakaran ,
× RELATED உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமாக பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்