×
Saravana Stores

பெரம்பலூர் (தனி), குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க தபால் அனுப்பும் பணிகள் தீவிரம்

பெரம்பலூர், செப். 26: ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளவர், அதனை நீக்குவதற்காக பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் 62 ஆயிரம் பேர்களுக்கு மாவட்டத் தேர்தல் பிரிவுமூலம் தபால் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங் களில் பெயர் உள்ளவர் களைக் கண்டறிந்து, அதனை சம்பந்தப்பட்ட வாக்காளர், ஏதாவது ஒரு முகவரியை தானாகவே நீக்கிக் கொள்ளும்படி அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகம் மூலம் தபால் அனுப்பும் பணி களை மேற்கொண்டு வரு கிறது. இதன்படி பெரம்ப லூர் மாவட்டத்தில் உள்ள 147-பெரம்பலூர் (தனி) மற்றும் 148-குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர் களில், ஒத்தபெயர் மற்றும் ஒத்த புகைப் படங்கள் இரு வேறு இடங்களில் இருக் கும் பட்சத்தில், வாக்காள ரின் சம்மதத்துடன் வாக்கா ளர் பட்டியலில் இருந்து பெயர், புகைப்படம் ஆகிய வற்றை நீக்கம் செய்வதற் கான பணிகள்பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவ லகத்தில் கடந்த சில தினங் களாகத் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

இதன்படி பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவல ரும், மாவட்ட கலெக்டர்மான கிரேஸ் பச்சாவ் தலைமை யில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, பெரம்பலூர் சப்.கலெக்டர் கோகுல், பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் அருளானந்தம் ஆகியோர், 2-சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கிராம உதவியாளர்கள் 65 பேர்களின் உதவியுடன் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்திலுள்ள பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்றுள்ள 62ஆயிரம் வாக்காளர்களுக்கு தபால் அனுப்பும் பணியில் ஈடுபட் டுள்ளனர்.

இது பற்றி தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கேட்ட போது, இந்தக்கடிதம் சம்பந் தப்பட்ட வாக்காளரிடம் கிடைத்த 15-நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட இரட்டை முகவரி கொண்ட வாக்கா ளர் எந்த முகவரியை நீக்க லாம் என்பது தொடர்பாக தானாகவே தேர்தல் பிரிவு அலுவலகத்திற்கு ரிப்ளை அனுப்ப வேண்டும். 15 நாட் களுக்குள் ரிப்ளை அனுப்ப வில்லையென்றால் சம்மந் தப்பட்ட வாக்குச்சாவடி அலு வலர் (BLO) நேரில் சென்று இரண்டுமுகவரியில் பெயர் மற்றும் புகைப்படம் இடம் பெற்றுள்ள வாக்காளரிடம், வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தப் பெயரை, படத்தை நீக்கிக் கொள்ள லாம் என்கிற ஒப்புதல் பெறப்பட்ட பின்பு, வாக்கா ளர் பட்டியலில் இருந்து அந்த வாக்காளரின் தேவை யற்ற பெயர் நீக்கம் செய்ய ப்பட்டுவிடும் எனத் தெரிவி த்துள்ளனர்.

The post பெரம்பலூர் (தனி), குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க தபால் அனுப்பும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Separate ,Gunnam ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே