×

இன்று உலக காது கேளாதோர் தினம்: அரை மணி நேரத்திற்கு மேல் ஹெட்போன் அணியக்கூடாது

பெரம்பலூர், செப். 26: செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என வான் புகழ் வள்ளுவரே தெரிவித் துள்ளார். கேள்விச் செல்வமே ஒருவருக்கு கிடைக்கும் மிகச்சிறந்த செல்வமாகும். அத்தகைய கேள்விச் செல்வத்தின் திறப்பு வாசலாக திகழ்வது தான் செவி. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என கூறும் அவ்வையாரும் செவிக் குறைபாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இருந் தும் குறைபாடுள்ள அவர் களை சமூகத்தில் உயர்த்து வதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை மாற்றுத் திற னாளிகள் என பெயரிட்டு அவர்களுக்கென ஒரு துறையை ஏற்படுத்தி அரசு நலத்திட்டங்களை வழங்கி வழிகாட்டியுள்ளார். அக்கா மகள், அத்தை மகள் என நெருங்கிய ரத்த உறவு கொண்டவர்கள் திருமணம் செய்து கொண்டால், அவர் களுக்கு பிறக்கும் குழந்தை காது கேளாத குறைபாட் டோடு பிறப்பதாகவும், அல்லது கர்ப்பிணிப் பெண் வயிற்றிலுள்ள சிசுவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கீழே விழுந்தாலோ,கடுமை யான அதிர்வுகளை சந்தித் தாலோ அல்லது குறை பிர சவத்தில் பிறக்கும் குழந் தைக்கோ இதுபோன்று செவித்திறன் குறைபாடு ஏற்படுகிறது என மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது.

குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் அக்குழந்தைக்கு கேட்கும் திறன் உள்ளதா என்பதை பெற்ற தாயாலே அறிந்து கொள்ள முடியும். காது கேட்காமல் வாய்பேச முடியாமல் பிறந்து விட்ட நபர்கள் சமூகத்தில் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சனைகள் சொல்லில் அடங்காது. இதற்காகத் தான் குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகும், கேட்கும் திறன் இல்லாத குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காக்ளியர் கருவி பொருத்திக் கொள்வது வழக்கமாக உள்ளது. அதே போல் வயது முதிர்வின் காரணமாக 60 வயதைக் கடந்தவர்களுக்கு கேட்கும் திறன் குறைந்து போவது வழக்கமாக உள்ளது. இவர் கள் ஆண்டுக்கு ஒரு முறை முறையான மருத்துவப் பரி சோதனை மூலம் காது கேட் கும் கருவிகளை வாங்கி பொருத்திக் கொள்வதால் மற்ற நபர்களோடு பேசிட வசதியாக இருக்கும். இந்நிலையில் பிறப்பால் ஏற்பட்ட செவித்திறன் குறைபாட்டை சிறப்பாசிரி யர்களைக் கொண்டு, உயர் கல்விவரை பயிலச்செய்து, அவர்களது வேலை வாய்ப் பிற்கும் வழிகாட்டும் வகை யில் பெரம்பலூரில்  கௌதம புத்தர் செவி மற்றும் பேச்சுத்திறன் குறையுடையோருக்கான சிறப்பு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருவது குறிப்பி டத்தக்கது.

சாதாரண மாணவர்களை சாதனையாளர்களாக ஆக் குவதை விட சைகையை நம்பியுள்ள செவித்திறன் அற்ற மாணவர்களை தனி த்திறன் பெற்ற மாணவர்க ளாக ஆக்கி காட்டுகிறோம் என பெருமிதத்துடன் பள்ள நிர்வாகி தெரி வித்தார். செவித்திறன் குறைபாடு பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் ரமேஷ் தெரிவித்ததாவது : உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி உலக அளவில் 44 கோடி போ் செவித்திறன் குறைபாடு டைய மாற்றுத்திறனாளி களாக உள்ளனர். அதில் 3.5 கோடி போ் குழந்தைகள். 130கோடி மக்கள் தொகை யுள்ள இந்தியாவில் 6.5 கோடி போ் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளாக உள்ளனா். உலக சைகை மொழியின் முக்கியத்துவத்தை அனை வரும் தொிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை யில், சைகை மொழியை அனைவாிடமும் கொண்டு சோ்ப்பதே உலக காது கேளாதோர் தினத்தின், சைகை மொழி தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக இக்கால சிறுவர் கள், மாணவர்கள், இளை ஞர்கள் மட்டுமன்றி தொலைத்தொடர்பு துறை யில் பணிபுரியும் ஊழியர் கள் என பெரும்பாலா னோர் தற்போது அதிக நேரம் செல்போன் பயன் படுத்தும் சூழலில், ஹெட் போன், ப்ளூடூத் அணிந்து கொள்கின்றனர். இவை நாம் சாதாரணமாக கேட் கும் ஒலியை விடக் கூடுத லான ஒலியையும், அதிர் வையும் ஏற்படுத்தக் கூடி யது. ரகசியத்திற்காகவும், இதர இரைச்சலில் இருந்து தவிர்த்துக் கொள்வதற்காக வும், இசைக்காகவும் இது போன்ற ஹெட்போன், ப்ளூ டூத் அணிந்து கொள்வது பெருகிவரும் நிலையில், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதுபோல், இவற்றை அரை மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதால் செவித்திறன் குறைபாடு ஏற்படும் அபாயம்உள்ளது. உலகில் உயிரோடு வாழும் வரை, பார்க்கவும் கேட்கவும் நமக்கு கண்களும் காதுக ளும் அவசியம் என்பதை உணர்ந்து கொண்டால், செவியை நாம் பாதுகாக்க முடியும் என தெரிவித்தார்.

உலக அளவில் 44 கோடி போ் செவித்திறன் குறைபாடு டைய மாற்றுத்திறனாளி களாக உள்ளனர். அதில் 3.5 கோடி போ் குழந்தைகள். 130கோடி மக்கள் தொகை யுள்ள இந்தியாவில் 6.5 கோடி போ் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளாக உள்ளனா். உலக சைகை மொழியின் முக்கியத்துவத்தை அனை வரும் தொிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை யில், சைகை மொழியை அனைவாிடமும் கொண்டு சேர்ப்பதே உலக காது கேளாதோர் தினத்தின், சைகை மொழி தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

The post இன்று உலக காது கேளாதோர் தினம்: அரை மணி நேரத்திற்கு மேல் ஹெட்போன் அணியக்கூடாது appeared first on Dinakaran.

Tags : World Day of the Deaf ,Perambalur ,Valluvar ,World Deaf Day ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு