×

கீரனூரில் பயணிகள் நிழற்குடை

ஆறுமுகநேரி, செப். 26: கீரனூரில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். ஆத்தூர் பேரூராட்சி கீரனூரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் கமால்தீன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர் ராஜலெட்சுமி முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், சேர்மன் ஜனகர், ஆத்தூர் நகர செயலாளர் முருகானந்தம், ஆழ்வை கிழக்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் முருகன், கீரனூர் ஊர் கமிட்டியினர் முருகேசன், முத்துலால், கிருஷ்ணகுமார், மேலாத்தூர் பஞ். துணை தலைவர் பக்கீர்முகைதீன், இன்ஸ்பெக்டர் மாரியப்பன், ஆறுமுகநேரி உதவி மின் பொறியாளர் ஜெபஸ்தாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கீரனூரில் பயணிகள் நிழற்குடை appeared first on Dinakaran.

Tags : Kiranur ,Arumuganeri ,Minister ,Anitha Radhakrishnan ,Athur Municipality Kiranur ,Assembly ,
× RELATED ஆறுமுகநேரி அருகே பனை காட்டில் திடீர் தீ