×
Saravana Stores

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 5 பேருக்கு அபராதம்

நாமக்கல், செப்.26: நாமக்கல்லில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 5 பேருக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். நாமக்கல் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் ஏட்டு மதிவானண் ஆகியோர், நாமக்கல்-மோகனூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது செல்போன் பேசிய படி வாகனத்தை இயக்கிய 5 டிரைவர்களுக்கு, தலா ₹1000 வீதம் இ-சலான் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சிக்னலில் நிற்காமல் வந்தவர்கள், சரக்கு வாகனங்கள் நகரில் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் நகருக்குள் சரக்கு வாகனத்தில் வந்த 10 பேருக்கும், இ-சலான் மூலம் தலா ₹500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 5 பேருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Traffic Division ,Inspector ,Venkatachalam ,Ettu Mathivanan ,Namakkal-Mohanur road ,Dinakaran ,
× RELATED உதகை, நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!!