×

சமுதாய மீள் பார்வை கூட்டம்

தொண்டி, செப்.26: தொண்டி அருகே நம்புதாளையில் வருடாந்திர சமுதாய மீள்பார்வை மற்றும் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது.கல்வி, மருத்துவம், சுகாதாரம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மேம்பாடு உள்ளிட்டவைகளில் பொது மக்களிடம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திட்ட அலுவலர் ஜெயலெட்சுமி தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் வரவேற்றார்.அரசு பள்ளிகள், கிராமங்கள் வளர்ச்சி, தனிநபர் மேம்பாடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினர். ஒருங்கிணைப்பாளர் நெஸ்டர், நம்புதாளை துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் தாமஸ், சிபிஓ தலைவர் கண்ணன், பாண்டித்துரை உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சமுதாய மீள் பார்வை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Review ,Thondi ,Nambuthalai ,Jayaletswami ,Dinakaran ,
× RELATED தீயில் மரங்கள் எரிந்து நாசம்