×
Saravana Stores

15,000 கிமீ தூரம் பாயும் சீனா ஏவுகணை சோதனை: அமெரிக்க நகரங்களை குறிவைக்கலாம்

பீஜிங்: பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று சோதனை நடத்தியதாக சீன அரசின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இது தொடர்பாக சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலில் நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் ஏவுகணை சரியாக விழுந்தது. இது எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக நடத்தப்பட்டது அல்ல என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த ஏவுகணை அமெரிக்க நகரங்களை தாக்கக்கூடிய அளவுக்கு உருவாகி உள்ளது. 12,000 முதல் 15,000 கிமீ வரை சென்று தாக்கும். அமெரிக்காவின் எந்த ஒரு நிலப்பரப்பையும் இந்த ஏவுகணை மூலம் தாக்க முடியும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

The post 15,000 கிமீ தூரம் பாயும் சீனா ஏவுகணை சோதனை: அமெரிக்க நகரங்களை குறிவைக்கலாம் appeared first on Dinakaran.

Tags : China ,US ,Beijing ,Ministry of Defense of the Chinese government ,Pacific Ocean ,Chinese Ministry of Defense ,Dinakaran ,
× RELATED தைவான் ஜலசந்தியில் அமெரிக்க போர்க்கப்பல்: சீனா ஆத்திரம்