×
Saravana Stores

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அரசு ஊழியர்களுக்கு இலவச சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


சென்னை: சென்னை கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ13 லட்சம் மதிப்பீட்டில் 3 பேட்டரி வாகனங்களை தொடங்கி வைத்தும், அரசு ஊழியர்கள், நீதிபதிகள், எம்பிக்கள் உள்ளிட்டோர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறும் திட்டத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை புறநோயாளிகள் 3,37,275 பேரும், உள்நோயாளிகள் 1,02,497 பேரும், அறுவை சிகிச்சைகள் 3,881 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது.

இம் மருத்துவமனையில் ரூ13 லட்சம் செலவில், நோயாளிகள் சென்று வருவதற்காக 3 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படும். அதேபோல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் என்எச்ஐஎஸ் (National Health Insurance Scheme – NHIS) திட்டத்தைப் பயன்படுத்தி இலவச சிகிச்சையை பெறலாம் என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்துடன், எம்.பிக்கள், நீதிபதிகள், ஒன்றிய அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் இம் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற சிஜிஎச்எஸ் (Central Government Health Scheme – CGHS) எனும் திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அரசு ஊழியர்களுக்கு இலவச சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kalainar Centenary Hospital ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Kindi, Chennai ,Dinakaran ,
× RELATED 2021ம் ஆண்டுக்கு பின் வெளிநோயாளிகள்...