- உலகம்
- தினம்
- பாரத் பல்கலைக்கழகம்
- சென்னை
- இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்கம்
- ஜனாதிபதி
- ஜி.செல்வராஜ்
- எம்.என்.தார்
- மருந்து கட்டுப்பாட்டு துறை
- தமிழ்நாடு அரசு
சென்னை: இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்க தலைவர் ஜி.செல்வராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை கூடுதல் இயக்குனர் எம்.என்.தர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நோயாளி, சுகாதாரப் பணியாளர்களை நம்பும்போது மட்டுமே சுகாதாரப் பாதுகாப்பு பயனுள்ளதாக இருக்கும். மேலும் நோயாளியின் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்துவது அவசியம். கோவிட்டுக்கு பிறகு, உலகம் மிகவும் தொலைநோக்கு பார்வையுடன் மாறிவிட்டது. சிறிய நகரங்களில், மருந்தாளர்கள் மருத்துவர்களைப் போன்றவர்கள். ஒரு டாக்டரை போலவே மக்கள் அவர்களை நம்புகிறார்கள்.
இங்குள்ள அனைத்து மாணவர்களும் உங்கள் வாழ்க்கையை சுகாதாரத் துறையில் ஒரு சிறந்த நிபுணராக உருவாக்க விரும்புகிறேன். நீங்கள் செய்யும் நல்ல வேலையைப் பற்றி எப்போதும் பெருமிதம் கொள்ளுங்கள்’’ என்றார். இதில் இந்திய மருந்தியல் பட்டதாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் நாராயண சுவாமி, செயலாளர் முரளி கிருஷ்ணன், பொருளாளர் இளங்கோ, மருந்தியல் துறை டீன் ஆர்.சீனிவாசன் மற்றும் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post பாரத் பல்கலைக்கழகத்தில் உலக மருந்தாளுநர்கள் தின நிகழ்ச்சி appeared first on Dinakaran.