×

தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது; 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு


சென்னை: மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்துள்ள வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்து ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது.

அமல்படுத்தப்பட்ட இந்த சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்குகளோடு சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டனர்.

The post தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது; 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,ICourt ,CHENNAI ,Madras High Court ,Union government ,Federation of Tamil Nadu Puducherry Bar Associations ,Tamil Nadu Puducherry Bar Associations ,High Court ,Dinakaran ,
× RELATED கடன் வசூல் மைய தீர்ப்பாயம்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்