×

பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பாஜ, பஞ்சாப் லோக் காங்கிரஸ், சன்யுக்த் கூட்டு அறிக்கை: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: பஞ்சாபில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்த முதல்வர் அமரீந்தர் சிங், பாஜ.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதாக தெரிவித்தார். பிறகு, பஞ்சாப் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.இந்நிலையில், அமரீந்தர் சிங், மாநிலங்களவை எம்பி. சுக்தேவ் சிங் தின்சா ஆகியோர் டெல்லியில் நேற்று பாஜ தலைவர் ஜேபி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து தேர்தல் உத்தி குறித்து ஆலோசனை நடத்தினர். இது குறித்து செய்தியாளர்களிடம் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், `பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜ, அமரீந்தர் கட்சி, தின்சாவின் கட்சி இணைந்து கூட்டு தேர்தல் அறிக்கை வெளியிட முடிவு எடுக்கப்பட்டது. இரண்டு கட்சிகளின் தலைவர்களையும் உள்ளடக்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட்டு தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்….

The post பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பாஜ, பஞ்சாப் லோக் காங்கிரஸ், சன்யுக்த் கூட்டு அறிக்கை: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Punjab Assembly Elections BJP ,Punjab Lok Congress ,Sanyukt ,Union Minister ,New Delhi ,Congress ,Punjab ,Assembly elections ,Dinakaran ,
× RELATED முதுகுதண்டில் அறுவை சிகிச்சை; அமரீந்தர் சிங்கிடம் நலம் விசாரித்த பிரதமர்