- தேவஸ்தான காவல்துறை
- திண்டுக்கல் ஏஆர் பால் பண்ணை நிறுவனம்
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- தேவஸ்தானம்
- திருப்பதி
- எய்மலையான் கோவில்
- திருமலை திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பிரசாதங்கள் தயார் செய்வதற்கும், புஜைகளுக்கு பயன்படுத்தவும் நெய் கொள்முதல் செய்து வருகிறது. அவ்வாறு தினமும் 15,000 கிலோ நெய் பயன்படுத்தப்படும் நிலையில் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு அதன்பேரில் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு திண்டுகலை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திற்கு கடந்த மே மாதம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
அதன்படி, ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் 6 டேங்கர்கள் நெய் சப்ளை செய்தனர். அந்த நெய்யை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அதே நிறுவனம் 4 டேங்கர்களை மீண்டும் அனுப்பி வைத்தனர். அந்த 4 டேங்கர்களில் அனுப்பிய நெய் சரியான தரத்தில் இல்லை என உறுதி செய்யப்பட்டு அதனை பரிசோதனைக்காக அனுப்பட்டது. பரிசோதனையில் கலப்படங்கள் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஐஜி தலைமையில் முதல்வர் சந்திரபாபு நாயிடு தனிப்படை விசாரணை குழுவை அமைத்துள்ளார். இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளி கிருஷ்ணா திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போலீசில் புகார் appeared first on Dinakaran.