- ராஜா அண்ணாமலை மன்றம்
- திமா
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- திமுகா
- சென்னை கிழக்கு மாவட்டம்
- வெற்றி விழா
- முன்னோடிகள்
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த முப்பெரும் விழாவில், 75 மூத்த முன்னோடிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய பொற்கிழியோடு கேடயம், சான்றிதழ் வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவுரவித்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதலமைச்சர் வழிகாட்டுதல்படி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் பவளவிழா ஆண்டின் முப்பெரும் விழா நேற்று நடந்தது. திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துெகாண்டு, திமுகவில் பணி 75 வயதை கடந்த 75 மூத்த முன்னோடிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய பொற்கிழியோடு கேடயம், புத்தாடை, சான்றிதழ் வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
நிகழ்ச்சியில், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய தலைவருமான பா.ரங்கநாதன், மண்டல குழு தலைவர்கள், பகுதி செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுக முன் னோடிகள் கலந்துகொண்டனர்.
The post ராஜா அண்ணாமலை மன்றத்தில் முப்பெரும் விழா; திமுக மூத்த முன்னோடிகள் 75 பேருக்கு கலைஞர் நூற்றாண்டு நாணய பொற்கிழி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.