×
Saravana Stores

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!

பெங்களூர்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைசூருவில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.4,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டது. சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த ரிட் மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட சமூக ஆர்வலர் உள்ளிட்டோர் புகார் தெரிவித்திருந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது மைசூரு லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.

The post கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Bangalore Special Court ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bangalore ,Bengaluru ,Sidharamaiah ,Mysore ,Urban Development Commission ,Sidharamaya ,Parvati ,Chief Minister Sidharamaiah ,
× RELATED லோக் ஆயுக்தா விசாரணை: சித்தராமையா ஆஜர்