×
Saravana Stores

நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்

பந்தலூர் : நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார்.
நெல்லியாளம் நகராட்சி மேலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக கள பணியாளர் நவமணி கலந்துகொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார்.

தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ருக்மணி, பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தண்டபாணி, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், துணை வட்டாட்சியர் விஜயன், நாவா களப்பணியாளர் விஜயா, மகாத்மா காந்தி பொது சேவை மையத்தலைவர் நௌசாத், மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது தடுக்க வேண்டும், குழந்தைகள் இடையே ஏற்படும் பிரச்னைகளை 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் குழந்தைகளை தனியாக இருப்பதை தவிர்த்து கல்வி கற்க அனுப்ப வேண்டும். தொடர் கல்வி வழங்க வேண்டும், போதை பொருட்கள் தடுக்க கண்காணிப்பு அவசியம் உள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள் வருவதை தொடர்ந்து அரசு தனி ஆப் மூலம் கண்காணிக்கப்படுகிறது மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால் தனி குறுஞ்செய்தி வருகிறது. இதனை பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக பழங்குடியின குழந்தைகள் அதிகம் பாதிக்கின்றனர். குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும்.

மேலும் பேருந்துகளில் போதிய இட வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் நெருக்கமாக போவதால் தவறுகள் ஏற்படுகிறது. எனவே கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் பள்ளி விட்டவுடன் வீட்டுக்கு செல்வதை கண்காணிக்க வேண்டிய அவசியம். குடியிருப்பு பகுதிகளில் தவறுகள் நடப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பந்தலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அதிக அளவு கவுன்சிலிங் வழங்குவது நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் குழுக்கள் மற்றும் பொதுமக்களிடமும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அதிகம் தகவல் பகிர் விழிப்புணர்வு ஏற்படுத்த குழுவினர் முடிவெடுக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தகவல்கள் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Child Protection ,Committee ,Nellialam ,Municipal ,Office ,Municipal Office ,Sivakami ,Nellialam Municipal ,Manager ,Sukumar ,Child Protection Office ,Navamani ,Child Protection Committee ,Nellialam Municipal Office ,Dinakaran ,
× RELATED மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 2...