×

வங்கதேசத்தினர் 6 பேர் திருப்பூரில் கைது..!!

திருப்பூர்: உரிய ஆவணங்கள் இல்லாமல் திருப்பூருக்கு வேலைக்கு வந்த வங்கதேசத்தினர் 6 பேரை போலீஸ் கைது செய்தது. திருப்பூர் பேருந்து நிலையத்துக்கு வந்த வெளிமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை போலீசார் பரிசோதனை செய்தனர். ஆய்வின்போது பேருந்து நிலையம் வந்த 6 பேரை விசாரித்தபோது அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. 15 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து பனியன் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக திருப்பூர் வந்துள்ளனர். 6 பேரின் அடையாள ஆவணங்களை பரிசோதித்த பனியன் நிறுவனம், ஆவணங்கள் இல்லாததால் அவர்களை திருப்பி அனுப்பினர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிய பல்லடம் செல்வதற்காக திருப்பூர் பேருந்து நிலையம் வந்த 6 பேரும் போலீசிடம் சிக்கினர்.

The post வங்கதேசத்தினர் 6 பேர் திருப்பூரில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur bus station ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!