×
Saravana Stores

அம்மாபேட்டை அருகே முதல்வர் திறக்க உள்ள புதிய பாலத்தை திறக்க முயன்ற அதிமுக எம்எல்ஏ: அதிகாரிகள் தடுத்தனர்

பவானி: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே குறிச்சி பகுதியில் உள்ள சித்தார் ஓடையின் குறுக்கே பொதுமக்களின் வசதிக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.42.76 லட்சம் மதிப்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் பாலத்தின் ஓரத்தில் வாழை மரங்கள் கட்டப்பட்டு, ஆங்காங்கே கொடிக் கம்பங்களும் நடப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரித்தபோது புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழா நடைபெறுவதாக அங்கிருந்த அதிமுகவினர் தெரிவித்தனர். இந்நிலையில், பாலத்தைத் திறக்க முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான கே.சி.கருப்பணன், அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர்கள் மேகநாதன், முனியப்பன், பேரூர் செயலாளர்  செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் சூழ  வந்தார். ஆனால், சம்பவ இடத்துக்கு வந்த பவானி தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், இப்பாலம் தமிழக முதல்வரின் திறப்பு விழா பட்டியலில் உள்ளதால், உரிய அதிகாரிகள் அனுமதியின்றி திறக்கக் கூடாது என கூறினர். அதிமுகவினர் திரண்டு வருவதையறிந்த திமுக மாவட்ட துணைச்செயலாளர் எம்.பி.அறிவானந்தம் தலைமையில் திமுகவினர் குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். இதனால், சம்பவ இடத்தில் பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின், எம்எல்ஏ கருப்பணன்,  பாலத்தைத் திறக்காமல் திரும்பிச் செல்ல முயன்றார். ஆனால், உடன் வந்த அதிமுகவினர் பாலத்தை திறக்காமல் செல்ல மாட்டோம் எனக் கூறி முரண்டு பிடித்ததோடு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகள் பாலத்தை திறக்க அனுமதிக்கவில்லை. பின்னர், அதிமுகவினர் புறப்பட்டுச் சென்றனர்….

The post அம்மாபேட்டை அருகே முதல்வர் திறக்க உள்ள புதிய பாலத்தை திறக்க முயன்ற அதிமுக எம்எல்ஏ: அதிகாரிகள் தடுத்தனர் appeared first on Dinakaran.

Tags : MLA ,Ammapet ,Bhavani ,Mahatma Gandhi ,Siddar stream ,Ammapet, Erode District ,Amapet ,
× RELATED அதிமுகவுக்கு வருங்காலங்களிலும் தொடர்...